விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் மார்ச் 6, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடந்தது. இதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

10 ஆம் வகுப்புக்கு மேலுள்ள மாணவர்களுக்கு லினக்ஸ் பற்றிய அறிமுக வகுப்பை தொடர்ந்தார் விக்னேஷ். பிறகு Inscape என்கிற கட்டற்ற மென்பொருள் பற்றி மாணவர்களுக்கு விளக்கி, அதில் சிறிய ஆக்டிவிட்டி ஒன்றை தந்தார்.

மற்ற மாணவர்களுக்கு கடந்த வாரம் அறிமுகம் செய்த libre calc மென்பொருள் பற்றிய தொடக்க வகுப்பை ஹரிபிரியா எடுத்தார். Libre calc- இல் உள்ள சில அரித்மேட்டிக் ஃபங்ஷன்ஸ் பற்றி தெளிவுபடுத்தினார். பிறகு அவற்றை மாணவர்களுக்கு ஆக்டிவிட்டி போன்று கொடுத்து, அது குறித்து தெளிவாக புரிந்துகொள்ளும் படி செய்தார்.

அடுத்தாக Libre Office Impress– இல் அனிமேஷனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி தீபக் வகுப்பு எடுத்தார். மாணவர்கள் இதை மிகவும் ஆர்வமாக கற்று கொண்டனர். இத்துடன் அடுத்த வாரத்திற்கு சில ஆக்டிவிட்டி செய்து வருமாறு கூறினார்கள். தந்தார்
இறுதியாக மாணவர்கள் படித்து வந்த புத்தகங்கள் பற்றிய சிறு கலந்துரையாடல் நடந்தது. இப்படியாக இந்த வார வகுப்பு இனிதே முடிந்தது.

வகுப்பு முடிந்த பிறகு சில மாணவர்கள் நமது கபிலர் கணினியகத்திலுள்ள கணினிகளை பயன்படுத்தி கற்றுக்கொள்ள பேருந்திலும், நடந்தும் வந்து பயன்படுத்தி சென்றனர்.