விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் October 30, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வார வகுப்பில் மாணவர்களுக்கு Gcompris என்னும் மென்பொருள் பற்றி கற்பிக்கப்பட்டது. இந்த மென்பொருள் குழந்தைகளுக்கு தருக்க சிந்தனை(logical thinking) வளர உதவும் மென்பொருள் ஆகும். இதில் பல வகையான குழந்தைகளுக்கு புரியும் வகையில் விளையாட்டுக்கள் இருக்கும் இந்த விளையாட்டுகளை குழந்தைகள் தனது மூளையை பயன்படுத்தி தீர்க்க வேண்டும்.

சௌந்தர்யா மற்றும் திலீப் அவர்கள் இந்த வார வகுப்பினை எடுத்தார்கள் சௌந்தர்யா அவர்கள் Gcompris அறிமுகத்தை மாணவர்களுக்கு கொடுத்தார் பின்னர் திலீப் அதில் உள்ள ஒரு விளையாட்டை மாணவர்களுக்கு விளக்கினார். மாணவர்கள் மிகவும் ஆர்வமுடன் இந்த விளையாட்டினை கற்றுக்கொண்டு solve செய்தனர்.

பின்னர் மாணவர்களுக்கு ஒரு sudoku கொடுத்து 5 குழுக்களாக பிரித்து solve செய்ய வைத்தனர். 2 குழு மாணவர்கள் பதில் சரியாக குழுக்களுடன் இணைந்து கண்டுபிடித்தனர் மற்றும் மாணவர்கள் குழுக்களாக இணைந்து பதில் கண்டுபிடிக்க முற்பட்டனர். அவர்கள் கண்டுபிடித்த, முயற்சிசெய்த sudoku பதில்களை இங்கே பதிவிடுகிறோம்.





வகுப்பின் இறுதியில் blender மூலம் உருவாக்கப்பட்ட குறும்படத்தை(spring – blender open movie showreel) மாணவர்களுக்கு திரையிட்டு காட்டினர்.

