விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் August 28, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த வார வகுப்பில் விக்னேஷ் அவர்கள் கணினியில் உள்ள பாகங்களை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அவர்களுக்கு புரியும் விதமாக கணினியின் பாகங்களை பிரித்துக் காண்பித்து கணினி என்ன செய்கிறது என்னவெல்லாம் உள்ளே இருக்கிறது என்று அவர் கூறினார்.

மாணவர்கள் இந்த வகுப்பினை ஆர்வமுடன் கற்றனர் இதன் அடிப்படையில் அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு விக்னேஷ் அவர்கள் பதில் அளித்தார்.

விக்னேஷ் அவர்கள் மாணவர்களிடம் கேள்வி எழுப்பினார் பின்னர் அந்த மாணவர்கள் இந்த கேள்விக்கு திறம்பட பதில் அளித்தனர்.
