விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் July 10, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 25-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வார வகுப்பின் தொடக்கத்தில் முந்தைய வாரங்களில் எடுத்த தலைப்புகள் குறித்து சிறு கலந்துரையாடலை செய்தோம். அதில் ஒவ்வொரு மாணவர்களும் தங்களுக்கு நினைவில் உள்ள மென்பொருள் பற்றியும், அது எதற்காக பயன்படுத்துகிறோம் என்பது பற்றியும், கணினி பயன்பாடு பற்றியும் கூறினார்கள். அடுத்தாக இந்த வாரத்தில் எடுக்க போகும் ‘GIMP’ மென்பொருள் பற்றிய வகுப்பை திலிப் அவர்கள் எடுத்தார்.

GIMP என்றால் என்ன, இது எதற்காக பயன்படுத்துகிறோம், இது போட்டோஷாப்பிற்கு மாற்றான கட்டற்ற மென்பொருள் போன்ற பல முக்கிய அறிமுகத்தை வழங்கினார். அடுத்ததாக Inkscape பயன்படுத்தி எப்படி ஒரு எளிமையான போஸ்டரை உருவாக்க வேண்டும் என்பதை எளிய உதாரணங்களுடன் விளக்கினார்.
போஸ்டர் வடிவமைப்பில் பாணாம்பட்டு கிராமத்தில் ஒரு நிகழ்விற்கான அழைப்பிதழை எப்படி உருவாக்க என்பதை வடிவமைத்து காட்டினார். மாணவர்கள் மிக ஆர்வமாக எப்படியெல்லாம் டிசைன் தரலாம் என்று யோசனைகளை கொடுத்தனர்.

அடுத்தாக, கணிதம் சார்ந்த சில puzzle-களை ஹரிபிரியா மாணவர்களிடம் கேட்டார். சில மாணவர்கள் மிக ஆர்வமாகவும் திறனுடன் பதிலளித்தனர். மற்ற மாணவர்களும் எப்படி இந்த பதில் வந்தது என்று ஆவலாக கேட்டனர். அடுத்து சென்ற வகுப்புகளில் எடுத்த மென்பொருள் சார்ந்த சந்தேகங்களை மாணவர்கள் கேட்டு விளக்கி கொண்டனர்.

இப்படியாக இந்த வார வகுப்பு இனிதே நிறைவடைந்தது.
