விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த பானாம்பட்டு GLUG-இல் மார்ச் 13, 2022 ஞாயிற்றுக்கிழமையில் வாராந்திர வகுப்பு நடைபெற்றது. இதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த வகுப்பில் libre calc பற்றிய அடுத்தடுத்த functions-களை வைபவி மற்றும் ஹரிபிரியா சொல்லி கொடுத்தனர். இதற்கு முன்னதாக கடந்த வாரம் libre calc-இல் கற்று கொண்டதை பற்றி மாணவர்களை சொல்ல சொன்னோம். ஒவ்வொருவராக வந்து அது குறித்து விளக்கினார்கள்.

இந்த வாரம் filter, roundup, if, sorting basics ஆகியவற்றை பள்ளியின் மதிப்பெண் எடுத்துக்காட்டை வைத்து சொல்லி கொடுத்தோம். அடுத்தாக மாணவர்களை 4 குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் தனி தனி டாஸ்க்குகளை கொடுத்தோம்.

முதல் குழுவிற்கு, 5 இடங்கள் மற்றும் அதற்கான தட்பவெப்பம் ஆகியவற்றை கொண்டு இந்த 5 functions அதில் இடம்பெறும்படி செய்ய சொன்னோம். இதை மாணவர்கள் ஆர்வமுடன் செய்தனர்.

இதே போன்று அடுத்தடுத்த குழுக்களுக்கு 2.சாப்பாடு அட்டவணை, 3. பள்ளி மதிப்பெண், 4. அன்றாட செலவுகள் ஆகிய டாஸ்க்குகளை கொடுத்து செய்ய சொன்னோம். மாணவர்கள் குழுக்களாக பிரிந்து சிறப்பாக இந்த டாஸ்க்குகளை செய்தனர்.

அடுத்தாக புத்தக வாசிப்பு பயிற்சியை தொடங்கினோம். இந்த வாரம் அறிவியல் அறிஞரான ஆல்பெர்ட் ஐன்ஸ்டின் பற்றி மாணவர்கள் படித்து காட்டினார். பின்னர் அது குறித்த சிறு கலந்துரையாடல் நடந்தது.

இறுதியாக சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு 2 புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த பரிசை வசந்தி மற்றும் சவரணம் பெற்றனர். இப்படியாக இந்த வார வகுப்பு நிறைவானது.