விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த கப்பூர் GLUG-இல் பிப்ரவரி 6, 2022 ஞாயிற்று கிழமை வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

8-ஆம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவிகள் முதல் கல்லூரி முடித்த பெண் பட்டதாரிகள் வரை பங்கேற்றிருந்தனர். அனைவரும் கணினி சம்மந்தமான தகவல்களை அறிந்துகொள்ள ஆர்வமாக இருந்தனர்.

கணினியின் பரிணாமம் பற்றி இன்றைய வகுப்பு ஆரம்பிக்க பட்டது. சதிஷ், கணினியின் தேவைகள் மற்றும் அதன் வரலாறு பற்றிய தொகுப்பை வழங்கினார் . மேலும், கணினி புரிந்து கொள்ளும் மொழியான Binary Numbers பற்றி எளிதாக மாணவிகள் புரிந்துகொள்ளும் வகையில் விளையாட்டு கணக்காக கரும்பலகையில் ஒவ்வொருவராக வந்து விடை எழுத சொன்னார். மாணவிகள் மிகவும் உற்சாகத்துடன் விடைகளை எழுதினார், விரைவாக புரிந்து கொண்டனர். சிவசக்தி, கணினியின் பாகங்களும் அதன் செயற்பாடுகளும் பற்றிய தொகுப்பை விளக்க படங்களுடன் கற்று கொடுத்தார்.

பிறகு, மாணவிகளின் எதிர்கால கல்வி நலன் கருதி அவர்களுக்கு 10- ஆம் வகுப்பிற்கு மேல் 11- ஆம் வகுப்பு பாடப்பிரிவுகளை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என விளக்கம் அளித்தார். இறுதியாக Keyboard Shortcuts பற்றி அறிந்துகொண்டு அதனை குறிப்பு எடுத்து வருமாறு வீட்டுப்பாடம் அளித்து இந்த வார வகுப்பு இனிதே முடிவடைந்தது.