அனைவருக்கும் வணக்கம்,
இந்திய தேசத்தின் மக்களிடையே பாதுகாப்பான இணைய பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதை வலுப்படுத்தவும் உழைத்து வரும் VGLUG அமைப்பின், “100கிராமங்கள் 100கிளைகள்” என்கிற முன்னெடுப்பில் ஐந்தாவது கிளையாக உதயமாகிறது கப்பூர் கிராம கிளை.
டிஜிட்டல் யுகத்தில் அதன் பலன்கள் அனைத்து தரப்பு மக்களையும் சென்று சேரவும் அதன் மூலம் கிராமப்புற பொருளாதாரம் முன்னேற்றம் அடையவும் கரம் கோர்ப்போம் வாருங்கள்!
அனைவரும் வருக! ஆதரவு தருக!!
நாள் : 30-01-2021
நேரம்: மதியம் 3மணி
இடம்: கப்பூர் கிராமம், விழுப்புரம்

Inauguration
சமீப காலமாக பல போலி செய்திகள், வதந்திகள் சமூக ஊடகங்களில் உலவி வருகின்றன. இது சமூகத்தில் தேவையற்ற தவறான புரிதலை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இத்தகைய போலி மற்றும் தவறான இணைய செய்திகள் பற்றிய விழிப்புணர்வை கிராமபுற மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் VGLUG பல கிராமங்களில் விழிப்புணர்வு பயிற்சி முகாம்களை நடத்தியும், பல தொழில்நுட்பத்தை பகிர்ந்தும் வருகிறது. அதன் தொடர்ச்சியில் ஐந்தாவதாக கப்பூர் கிராமத்திலும் 100 Villages 100 GLUGs என்ற முன்னெடுப்பில் புதிய GLUG கிளையை VGLUG அமைப்பு இந்த வாரம்(30-Jan-2022) அன்று தொடங்கியது.

இதற்கு கப்பூர் கிராமத்தை சேர்ந்த சுகன் ராஜ், ரமேஷ், செல்வா மற்றும் கிராம நண்பர்கள் பலர் மக்கள் பயன்பெறும் வகையில் GLUG தொடங்க உறுதுணையாக இருந்தனர். மேலும் திருமலைசெல்வன் மற்றும் கிருஷ்ண குமாரும் உதவியாக இருந்தனர்.

தொடக்க நிகழ்வில், முதலில் மணிமாறன் அவர்கள் VGLUG குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் கூறினார். பிறகு கிராமங்களை நோக்கிய VGLUG இன் கிளைகளின் தேவையையும், கட்டற்ற மென்பொருளின் தேவை, போலி செய்திகளால் ஏற்படும் விளைவு மற்றும் இணைய குற்றங்கள் குறித்தும் விழ்ப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் இணையத்தில் உள்ள செய்திகளை எவ்வாறு அணுக வேண்டும், ஒரு செய்தியின் உண்மை தன்மையை எவ்வாறு அறிந்துகொள்வது பற்றியும் விவரித்தார்.

பிறகு பேசிய சதீஷ்குமார், தொழில்நுட்பத்தின் பயன்களையும் மற்றும் அதனை எவ்வாறு கற்றுக்கொள்வது என்பதையும் எளிமையான முறையில் விவரித்தார். அதனை அடுத்து கிராம மாணவர்களிடம் தொழில்நுட்பத்தை பற்றியும் மற்றும் அதன் தற்போதைய தேவைகளை பற்றியும் கலந்துரையாடல் செய்தார்.

அடுத்து விஜி அவர்கள் மாணவர்களிடம் பொதுவான கலந்துரையாடினார். அதன் பிறகு மாணவர்களிடம் அவர்களுக்கு எந்த எந்த தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொள்கிறார்கள் என்பதனையும் மற்றும் புதிய தொழில்நுட்பத்தை பற்றியும் தெளிவாக விரிவித்தார்.

இறுதியாக சதிஷ் அவர்கள் கப்பூர் GLUGஇல் வாரந்திர கூட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

இந்நிகழ்விற்க்கு வருகை புரிந்த மணிமாறன், சதிஷ், விஜி, குரு, ரமேஷ், சுகன் ராஜ், செல்வா மற்றும் கிராம மக்கள் அனைவருக்கும் நன்றிகள்.
இன்நிகழ்விற்கு தொழில்நட்ப உதவி புரிந்த சௌந்தர்யா, கீர்த்தனா, குரு அவர்களுக்கும் நன்றி.



இன்றைய முன்னெடுப்பு சிறக்க வாழ்த்துக்கள்
LikeLike