விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் அமைப்புடன் (VGLUG) ஒருங்கிணைந்த கொண்டங்கி GLUG-இல் ஜனவரி 8, 2022 சனி கிழமையில் வாராந்திர கூட்டம் நடந்தது. இதில் சுமார் 8+ மாணவர்கள் கலந்து கொண்டனர்.

முதலில் கடந்த வகுப்பில் கற்றுக்கொண்டதைப் பற்றி ஒரு கலந்துரையாடல் மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் பலர் மிக ஆர்வமாக பதில் அளித்தனர்.

திலீப் அவர்கள் email phishing என்றால் என்ன மற்றும் அது எப்படி நடக்கிறது என்பது குறித்து விளக்கத்தை கூறினார். பிறகு Free & Open source software குறித்து லோகநாதன் அவர்களும், Windows & GNU/Linux OS-களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளை பிரதாப் அவர்களும் கூறினார். மாணவர்களும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டனர் மேலும் பல கேள்விகளையும் அது குறித்து கேட்டனர் அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டது. Kalizium என்ற தனிம வரிசை அட்டவணைகான FOSS மென்பொருளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தி அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கப்பட்டது. இறுதியாக அனைவரும் அடுத்தடுத்த வகுப்புகள் குறித்து கலந்துரையாடி இந்த வார கூட்டத்தினை நிறைவு செய்தோம். கொண்டங்கி கிராமத்தில் கிருஷ்ணா மற்றும் அருண் ஆகியோர் உதவிகரமாக இருந்தனர். கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவருக்கும் நன்றி.
